மெத்தப்படித்த மேதாவிகளையும் சித்தமது சிதறியே
பித்துப் பிடித்தே சுத்த செய்திடும்
அத்தனை செயல்களுமே தற்குறித்தனமெனவே நானுணர்கின்றேன்
பெத்த பிள்ளையின் சுட்டித்தனமதால் கட்டப்பட்ட
சித்தப்பனும் பெத்தப்பனும் புத்தியை மறத்தலும்
எத்தனையோ ஏக்கங்களுடன் இத்தனை நாளிருந்தவன்
பத்தினியாய் வந்தவளிடம் கதியிவளென மதியிழத்தலும்
சுத்தியுள்ள யாதினையும் சுத்தமாய் சிந்தியாதே
சத்திய அன்பதுவே சரித்திரமென சரணடைந்திடும்
முத்திய அன்பெலாமும் புத்தியிருந்துமில்லா தற்குறித்தனமாமே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதி_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: மெத்தப்படித்த
previous post