ரோஜாப்பூ கண்ணம் பட்டென மின்னும்
ஆயிரம் முத்தங்கள் பரிசாய் நித்தம்
கொஞ்சும் மனங்கள் அவளின் மஞ்சம்
அன்னை முத்தம் அன்பின் சின்னம்
தந்தை முத்தம் பாசத்தின் சின்னம்
அக்காவின் முத்தம் ஆசையின் சின்னம்
தங்கையின் முத்தம் விளையாட்டு சின்னம்
உறவின் முத்தம் ஊரார் முத்தம்
நட்பின் முத்தம் என கணக்கில்லா
முத்தங்கள் கொள்ளும் சின்ன கண்ணம்
மித்ரா சுதீன்.