லட்சியம் அல்லாத அனைத்துமே அலட்சியமாகிடுமே
அனைத்தையும் லட்சியம் செய்தே பழகிடுவோமே
லட்ச(பேர்)த்திலும் தனித்தன்மையாகிடவே லட்சியம் கொள்ளுவோம்
லட்சங்கள்(பணம்) லட்சியமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம்
லட்சணமிலாததென எதுவுமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம்
லட்சணமென்பது அன்புறவெனவே லட்சியம் கொள்ளுவோம்
லட்சியம் என்பதை அலட்சியம் செய்யாதவரை
அலட்சியம் செய்தவரும் லட்சியம் செய்திடுவரே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: லட்சியம்
previous post