வான் வீதியிலே விண்மீன்களின் பேரணி
வெள்ளி மேகங்களை வடிவங்களாகக் கொண்டாடும்
மழைத் துளிகள் மகிழம்பூ மாலையாக…
பொங்கும் அலை புடைசூழப் பிரவாகமாக…
வண்ணப் பொடிகள் கோலத்தை அலங்கரிக்க…
அதிகாலைக் காற்று மேனி தழுவ…
அமைதியின் அசைவில் அற்புத ஊர்வலமாய்…
களிநடம் புரியும் கன்னியின் கண்களில்…..
கூடிய காதல் கவிதையாய் மிதந்தால்…..
காளையர்க்கு வாழ்க்கை கொண்டாட்டம் ஆகும்.
நா.பத்மாவதி
வாரம் நாலு கவி: வான்
previous post