வாழ்ந்து பார்க்க வாசல் திறந்தவள்
வண்ணங்கள் கொண்ட மனிதர்களை உருவம் காட்டி என்னை உயிர்ப்பித்தவள் உயிருக்கும் உணர்வுக்கும் உணவானவள் உவகையை ஒளித்து உதிரம் தின்பவள் உலக அரங்கில் புது ஓவியமானவள் பசிப்பிணி கலந்து தம் பருவம் எடுப்பவள் நாள்தோறும் என்னை வெறுமனே தின்பவள் அவள் தான் வறுமை என்ற பெயரை கொண்டவள்
மு. சிவக்கொழுந்து