விதியின் சதியோ அதிர்ஷ்டத்தின் பலனோ
பிறந்த இடம் வறுமையாச்சு – அது
தந்தையின் குடியால் நிரந்தரமாச்சே
தங்கையின் பசி கண்டு
படிப்பு பாதியில் நின்று போச்சு
கடின உழைப்பு தொடங்க
இளமை எல்லாம் வறுமை ஆச்சு
உழைப்பு கடினமா ஆச்சு இருந்தும்
வறுமை நிரந்தரம் ஆச்சு
படிப்பின் அருமை தெரிஞ்சு
பிள்ளைகள் பட்டம் வாங்கியாச்சு
அடுத்த தலைமுறையாவது இனி
வறுமை இல்லாமல் இருக்கும்
என நம்பிக்கை வந்துடுச்சு
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: விதியின்
previous post