விதையே விருட்சமாய்
வித்தாகிய பவளமுத்து
எல்லைக்கு ஒன்றாய்
ஏழெட்டு பெயர்கள்
எட்டிப் பறக்கும்
முட்டைக் கோழியையும்
முட்டித்தள்ளி முதலிடமெய்தும் புரதக் களஞ்சியம்
இரத்தத்தோள் தரித்த
சைவத் துறவி
சரிவிகித உணவின்
சாமர்த்தியப் பிறவி
சிறுதுளி பெருவெள்ளமெனும் சொல்லழகின் ஓர்அங்கம்
சிறுகைப்பிடியில் சிற்றுடலை சீராக்கும் பாரியசித்தன்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: விதையே
previous post