விலங்கிடப்படா தேசத்தில்
இடையூறேதுமில்லா இயக்கத்தில்
ஐயறிவுயிர்கள்
காப்பரணாய் இயற்கைச் சுவரமைத்துத்தர
சொந்தமாயொரு வீடு
தூளியாய்த் தாலாட்ட மரக்கிளைகளும்
இளைப்பாற
அதனடிகளும்
இப்புவனந்தனில் கொடுத்து வைத்த உயிர்களாய்
வலம்வர
கானகமே சோலையானதால்
பிறரிடம்
யாசித்துண்ண வேண்டாமல்
தன்னையே முன்னிலைப் படுத்தும்
விலங்குக் குடும்பம்
உனைக்
கூட்டமென்று சொன்னால்
பிழையாகிப் போகும்
தேடலுக்கான தத்துவத்தின்
சான்றாகிப் போய்
நின்று
வனமேகத்தின் வானவில் வண்ணங்களாய்ச் சுற்றித் திரிந்து
பசுமைப் போர்வையில் துயிலெழும்
நட்சத்திரங்கள் இவை!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: விலங்கிடப்படா
previous post