விலையென்பது என்றும் பணமாய் இருப்பது இல்லை:
மழலைச் செல்வம் வேண்டின் விலையாய்க் காதல்!
சுற்றமும் நட்பும் வேண்டின் விலையாய் அன்பு!
நன் மதிப்பெண் வேண்டின் விலையாய் உழைப்பு!
மேலான வேலை வேண்டின் விலையாய் முயற்சி!
சமூக மரியாதை வேண்டின் விலையாய் பணிவு!
உடல்நலம் பேணுதல் வேண்டின் விலையாய் பயிற்சி!
ஆரோக்கியம் வேண்டின் விலையாய் சரிவிகித உணவு!
எதுவாகினும் வேண்டும் என்றால் விலைகொடுக்க தயாராகு!
விலையென்பது என்றும் பணத்தால் மதிப்பிடுவது இல்லை!
பூமலர்