வெண்ணெயில் குழைத்த வெண் கன்னம்!
பஞ்சில் பொதிந்த பூ கிண்ணம்!
மழலையில் அள்ளிய உன் சிரிப்பில்!
பூந்தளிர் நடைநடந்து
விழாமல் விழுந்து!
துள்ளி துள்ளி குதித்து ஓடி!
விலோசனங்கள் விரிய கன்னம் குழைய!
நீ சிரித்து சிதறிய முத்துக்களை!
என் நினைவலையில் பொதிந்து உணர்ந்து!
உயிர் துடிதுடிக்க மறித்து நின்றேனடி!
நீ மாற்றானின் மனைவியான நொடிப்பொழுதில்…
சுஜாதா.