எழுதியவர்: லீலா ராமசாமி
சொல்: முட்டை
“ராசா! நாட்டுக்கோழி முட்டை. வாங்கி போணி பண்ணுப்பா.”
பாட்டி அழைத்தாள். வயது எண்பதுக்கு மேலிருக்கும்.
கிராமத்திலிருந்து காய்கறிகளைச் சுமந்து வந்து நடைபாதையில் கடைபரப்பி விற்பாள். அவளிடம் நான் பேரம் பேசுவதில்லை. இன்று முட்டை விற்கிறாள்.
“முட்டை என்ன விலை?”
“ஒரு முட்டை 12 ரூபா.”
(சாதாரண முட்டையை விட இரண்டு மடங்கு விலை.)
“நாட்டுக்கோழி வளக்குறியா?”
“இல்ல. தெரிஞ்ச தம்பி இந்த முட்டையைக் குடுத்து வித்துட்டு வரச் சொல்லிச்சு. எனக்கும் ஏதாவது காசு கெடைக்கும்.”
பத்து முட்டைகளை வாங்கினேன். வீட்டில் அதை உடைத்தபோதுதான் அது சாயமேற்றப்பட்ட சாதாரண முட்டை என்று தெரிந்தது.
உடனே பாட்டியிடம் சென்றேன்.
“பாட்டி! இது நாட்டுக்கோழி முட்டை இல்லை. சாயம் போட்ட சாதாரண முட்டை. அந்தத் தம்பிகிட்ட வாங்கி விக்காதீங்க. உங்களைத்தான் தப்பா நினைப்பாங்க.”
பாட்டியிடம் அதிர்ச்சி.
“ஒருகை பிடிப்பா”
கூடையைத் தூக்கிவிட்ட என் கையில் அறுபது ரூபாய்!
வியாபாரத்தில் நேர்மை.
வறுமையிலும் செம்மை
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.