எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: துடைப்பம்
கொளுத்தற வெய்யில் வள்ளியம்மா தன் தலைச் சுமையை அந்த வீட்டு திண்ணையில் இறக்கி வைத்து தன் புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.தொண்டை வரண்டு வந்தது,கொஞ்சம் ஜில்னு தண்ணி கிடைச்சா நல்லா இருக்கும்.
வீட்டுக் கதவு மூடியிருந்தது,தட்டினா திட்டுவாங்களோ.”அம்மா துடைப்பம்மா 30 ரூபாதான்மா பூமாரு,தென்னைமாரு கைலயே அடர்த்தியா கட்னதும்மா” ரெண்டு மூணு தடவை தொண்டை கிழிய கத்தினாள்.
டப்னு கதவு திறந்தது,வெளியே வந்த பெண்,”ஏம்மா இப்படி கத்தறே,வேணும்னா கூப்பிட மாட்டோமா?”
“அதில்லை கொஞ்சம் குடிக்க முகம் கழுவ தண்ணி வேணும்”
“ரூபா கொடுத்தா கடைல கிடைக்குது,நாங்களே தண்ணி இல்லாம திண்டாடறோம்”
உள்ளே இருந்து ஓடி வந்த 10 வயசுப் பெண்,’பாரும்மா தம்பியை டாங்கர்ல பிடிச்ச தண்ணியை கீழே கொட்டி விளையாடறான்”
“சரி கத்தாதே தண்ணிதானே போயிட்டுப் போகுது”வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம், மக்கள் மனசை சுத்தப் படுத்த?
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.