எழுதியவர்: தி.வள்ளி
சொல்: குடை
ஆவுடையா பிள்ளை வாக்கிங் கிளம்பிவிட்டார் ..வெள்ளை வேட்டி சட்டை கையில் வாக்கிங் ஸ்டிக்.
கம்பீரமான தோற்றம். உள்ளூர் பள்ளி தலைமையாசிரியர்.
அந்த வாக்கிங் ஸ்டிக் அவர் தாத்தா அவருக்கு கொடுத்தது. அதுவும் சிங்கப்பூர் நண்பர் வாங்கி வந்தது. பார்க்க சாதாரண வாக்கிங் ஸ்டிக்.. அழகான வேலைப்பாட்டுடன் உள்ள கைப்பிடியைத் திருக்கினால் உள்ளே ஒரு குடை. அவர் மகன் முகுந்தன் கேலி பண்ணி சிரிப்பான். அப்பா இதை நம்பி குடை எடுக்காம போகாதீங்க என்பான். ஒரு நாளும் அவன் அதை விரித்துப் பார்த்ததில்லை.
இரவு படுத்தவர் காலையில் எழுந்திருக்கவில்லை. அவருடைய ஈமசடங்குகள் முடிய, முகுந்தன் கண்ணில் அந்த வாக்கிங் ஸ்டிக் பட்டது. அதன் பிடியைத் திருகி அதன் உள்ளிருந்து குடையை எடுத்து விரித்தான். ஒன்றிரண்டு சிறு ஓட்டைகளுடன் குடை அழகாய் விரிந்தது. எத்தனை அழகிய வேலைப்பாடு.. முதல் முறையாக அவன் சிரிப்பு வியப்பாய் மாறியது.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.