100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஆளுக்கு ஒரு துண்டு

by admin 3
128 views

எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா

சொல்: முட்டை

பள்ளி முடிந்து வீடுவந்த பிரதீப் ஆயா பசிக்குது என்ன இருக்கு என்றபடியே சட்டி பானையை திறந்து பார்த்தான்.

குழம்பில் மிதந்த முட்டையை பார்த்து ஐ முட்டையென கத்தினான் உற்சாகமாக.

அது இருக்கட்டும் அப்பாவுக்கு கொடுக்கலாம் என்றாள் வள்ளியம்மாள்.

சின்ன பையன் சிவா சுருங்கிய முகத்தோடு முருங்கைக்காய் குழம்பு ஊத்தி சாப்பிட்டான்.

இரவு வேலை முடிந்து வீடு வந்த வேணியிடம் முருகனைக்காட்டி முட்டை வச்சிக் கொடு உம்புருசனுக்கு என்றாள் வள்ளியம்மா.

முருகன் வேணியிடம் எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு என்றான் சாப்பாடு பரிமாறிய வேணி அம்மாவின் தட்டில் எடுத்து வைத்தாள்.

நீங்க சாப்பிடுங்க அம்மா என்றவாறு
முட்டையை கையில் எடுத்து பார்த்த வள்ளியம்மா, ஒரு முட்டை தானே இருக்கிறதென்றே பேரனுக்கு கொடுக்கல என்றெண்ணியபடியே தூங்கிக்கொண்டிருந்த பேரனை எழுப்பினாள்.

இந்தாய்யா முட்டை என்றாள்.

சினுங்கியவாறே எழும்பிய சிறுவன் முட்டையை பார்த்ததும்
ஐ முட்டையென சந்தோசமாய் வாங்கினான் கைகளில்.

வாங்கிய வேகத்தில் சுற்றி ஒரு முறை அனைவரையும் பார்த்தான்.

முட்டையை நான்கு பங்காக பிரித்தவன் ஆளுக்கு ஒரு துண்டாக கொடுத்து மகிழ்ந்தான்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!