எழுதியவர்: நந்தினி கிருஷ்ணன்
சொல்: சந்தனம்
பசுஞ்சோலை என்ற கிராமத்தில் சந்தன மரம் வளர்ந்திருந்தது. அதன் வாசனைப் பசுமைமிக்க காற்றில் பரவியது, அதன் அடியில் ஓரிடத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டும், பூமியில் சாய்ந்திருக்கும் கிளைகளில் பறவைகள் குருவிகளாகச் சிரமமின்றி அமர்ந்து கீச்சு விடும்.
மக்கள் அந்த வாசத்தை உணர்ந்து அதனடியில் மாலை நேரங்களில் உட்கார்ந்து அனுபவிப்பர். இதனால்
கிராம மக்கள் சந்தனம் மரத்தை மிகுந்த பாசத்துடன் பாதுகாத்தனர். அந்த மரம் அவர்களுக்குப் பொக்கிஷமென்றே கருதப்பட்டது.
ஒருநாள், அந்த கிராமத்தில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டிற்கு கல்லூரியில் படிக்கும் ராஜா வந்தான் அந்த மரத்தைப் பார்த்து அதிசயமாக “பாட்டி இது சந்தன மரம் உங்களுக்கெல்லாம் தெரியுமா?” என்று கேட்டான் பாட்டி தாத்தா இருவரும் “நன்றாக தெரியும் அதனடியில் நாங்கள் அமர்ந்து தினமும் அதன் வாசத்தை முகர்ந்து சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் காற்றினை ரசிக்கிறோம். என்று பெருமையாக சொன்னார்கள்
“தாத்தா, அந்த மரத்தை வெட்டி விற்றால் மிக அதிகமாக பணம் கிடைக்கும்” என்று சொன்னவுடன் தாத்தா அதிர்ச்சியாக “அதெல்லாம் வெட்டக்கூடாது எங்களுக்கும் அதனுடைய உபயோகம் பற்றியும் அதன் பயன் பற்றியும் தெரியும் நீ இதைப் பற்றி கிராமத்தில் யாரிடமாவது பேசினால் அவர்கள் உன்னை இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் தயவு செய்து அதை பற்றி பேசாதே” என்று கடுமையாக சொன்னார்
தாத்தாவின் இந்த கடுமையான வார்த்தைகளால் மிகவும் வருந்திய ராஜா தாத்தா பாட்டியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஊருக்கு கிளம்பி விட்டான் ஆனால் தாத்தா அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவர்களுக்கு அந்த மரம் பற்றியும் அந்த கிராமத்து மக்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்றும் தெரியும் என்பதால் தன் பேரனை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்று அமைதியாக இருந்தனர்.
சந்தனமரமானது பசுமையுடன் நின்று, கிராமத்தின் வாழ்வுக்கு ஆனந்தம் தந்தது.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.