எழுதியவர்: உஷாமுத்துராமன்
சொல்: விரல்
70 வயது வயதாகும் பார்வதி அம்மாளுக்கு தினமும் நடைப் பயிற்சி செய்தால் தான் சர்க்கரையின் அளவு குறையும் என்ற நம்பிக்கை இருந்ததால் காலையில் நந்தவனத்தில் நடைப் பயிற்சி செய்வார் . அதேபோல் அன்று காலையில் நடைப்பயிற்சி சென்றார்.
நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும் போது அவரது விரலில் சிலந்தி ஏறியது. அது சின்னதாக இருந்தாலும் பார்வதி அம்மாள் பயந்து விரலை வேகமாக உதறினார் .
சிலந்தி கீழே விழுந்து ஓடிவிட்டது. இதைப் பார்த்து அருகில் இருந்த ஒரு சிறுவன் சிரித்தான் பார்வதி அம்மாள் அதைக் கண்டு கொஞ்சம் நாணிப்போனார், ஆனால் சிறுவனின் சிரிப்பு அவரை மகிழச்சியில் ஆழ்த்தியது.
அந்த சிறு பையனின் சிரிப்பு பார்வதி அம்மாளில் மனதுக்குள் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்ததால் உள்ளத்தில் இருந்த பயம் போய் தன் பயத்தை வெல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.