எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: முட்டை
வேணுகோபால் படிப்பு ஏறாமா திருப்பதில இருந்து நாமக்கல் வந்தடைந்த வேணுவுக்கு முட்டை வியாபாரி கோவிந்தராஜ் அடைக்கலம் கொடுத்தார்.
கோழிப் பண்ணை நுட்பங்களை வெகு விரைவில் கற்றுத் தேர்ந்தான், அவர் மகள் கிருஷ்ணவேணியை காதலித்து அவர் கோபத்துக்கும் ஆளானான்.
காதல் இருதரப்பிலும் என்பதால் வேறு வழியின்றி கிருஷ்ணவேணியை
வேணுவுக்கே கல்யாணம் பண்ணி வைத்தார்,கோழிப் பண்ணையையும் ஒப்படைத்தார்.
தொழில் வேகமாக விரிவடைந்து மிகப் பெரிய முட்டை வியாபாரி ஆனார்.
வளர்ச்சி போட்டியாளருக்கு பிடிக்குமா,கோவிந்தராஜின் தம்பி பையன் ஜெகதீசன் எங்க இடத்தை ஆக்ரமித்து கோழிப்பண்ணைனு கேஸ் போட்டார். மன அமைதி இழந்த வேணு கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அல்லாடுகிறார்.
சிவகாமி வேணுவின் 18 வயது மகள் அப்பான்னா உயிர் அவர் மன அமைதியின்றி உழல்வதைப் பார்த்தாள். ஏதாவது நாம செய்யணுமேனு யோசிச்சா.அடுத்த
ஒரே மாசம் கேஸை திரும்ப வாங்கிட்டார் ஜெகதீசன்.
ஒண்ணுமில்லைங்க, சிவகாமி, ஜெகதீசன் மகன் கதிர் வேலைப் பாத்து
ஒரு சின்ன புன்முறுவல், கோயமுத்தூர்லயா படிக்கிறீகனு விசாரணை கதிர் காதலில் விழுந்தான் கதை முடிந்தது.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.