100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: தாத்தா கொடுத்த பரிசு

by admin 3
150 views

எழுதியவர்: உஷாமுத்துராமன்

சொல்: குடை

எட்டாம் வகுப்பு படிக்கும் முரளி   பள்ளிக்கு செல்லும் போது  எப்போதும் ஒரு பழைய குடையை எடுத்துச் செல்பவன். 

மழை வெயில் என்று எதற்கும் அதைப் பிரித்து பிடித்துக் கொண்டு போவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 

அந்த குடை  மிகவும் பழையதாக  இருந்தது, இருந்தாலும்  அவனுக்கு மிகவும் பிடித்தது.

ஒருநாள், மழை கனமாய் பெய்யத் தொடங்கியது. அனைவரும் தங்கள் குடைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, முரளியின் பழைய கொடை காற்றில் எங்கும் ஆடியனாலும் அவனை மழையில் இருந்து காப்பாற்றியது. 

பழைய கொடையுடன் முரளி வருவதை பார்த்த அவன் பள்ளியில் இருந்த நண்பர்கள் அனைவரும் மிகவும் கேலி செய்தார்கள்

இருந்தாலும் முரளி அந்த குடையை விட விரும்பவில்லை. “இந்த குடை என் தாத்தாவிடம் இருந்தது. அவர் அதை எனக்கு நினைவாக கொடுத்தார்.

அதனால் இது எனக்கு மிகவும் பிடிக்கும் இதை பிடித்துக் கொண்டு நடக்கும் பொழுது நான் என் தாத்தா கையை பிடித்துக் கொண்டு நடப்பது போல என்னை மகிழ்ச்சியடைவேன்” என்று நண்பர்களிடம் சொன்னான்

முரளி சொன்னதை கேட்டவுடன் அவனுடைய நண்பர்கள்” ஆமாம் நம் தாத்தா மிகவும் ஆசையானவர்கள் அவர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் நாம் கண்டிப்பாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் இதை எப்படி இருந்தாலும் விட்டு விடாதே உனக்கு பிடிக்கும் போதெல்லாம் கையில் எடுத்து அதை பிடித்து நடந்து கொண்டிரு” என்று உற்சாகத்துடன் சொல்ல முரளி அவர்களை பார்த்து “சரி” என்பது போல கட்டை விரலை  உயர்த்தி காட்டினான்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!