எழுதியவர்: சுஶ்ரீ
சொல்:அன்னாசி
அண்ணா நகர் விகாஸ் டவர்ல இருக்கறப்ப அனன்யா எஸ்.பி,ஓ.ஏல 12வது படிச்சிட்டிருந்தா.
17 வயது,கார்த்தியையும்,
சிவகார்த்திகேயனையும் லவ் பண்ற வயசு.
மும்பைல இருந்து ஏதோ இன்டர்வ்யூனு சந்த்ரு மாமாவும், அவர் பையன் கோபியும் வந்தாங்களா அந்த கோபிப் பையன் எப்பவும் இவளை வம்புக்கிழுத்தான் பெரிசுகளும் சிரிச்சிட்டே முறைப் பையன்னா அப்படித்தான்னு அனன்யாவை சமாதானப் படுத்தினார்கள்.
“ஏய் அனா,உன் பேர் ஏன் தெரியுமா இப்படி வச்சாங்க,உன் தலைக்கு மேல கொண்டையும், நீள முகமும்,சில ஃபீச்சர்ஸ் பாத்தா அன்னாசிப்பழம் மாதிரியே இருக்கயா அதான்.”
தன் முகத்தில் உள்ள பருக்களை வச்சி கேலி பண்றான்னு தெரிஞ்சது. ”உன்னைப் பாத்தா யாருக்குமே கோபம் வரும் அதான் கோபினு உனக்குப் பேரு.”
“நம்ம கல்யாணத்துக்கப்பறம் நீ மிஸஸ்
கோபி ஆயிடுவயே அப்ப?”
“ஐய்யே ஆசையப் பாரு எனக்காக சிவகார்த்திகேயன்,கார்த்தி லைன்ல
நிக்கறாங்க தெரியுமா?”
“போடி ரொம்பத்தான்” முகம் தொங்கிப்
போய் திரும்பினான்.
அன்ன்யாவுக்கு அவனைப் பாக்க பாவமாய் இருந்தது.”சரி,சரி நீயும் லைன்ல வா யோசிக்கறேன்”
அதெல்லாம் இப்ப கனவு மாதிரி
கோபிக்கு இந்த அன்னாசி புளிக்குதோ
எப்பவும் திட்டறான்,கல்யாணம் ஆயிட்டா ஆசை போயிடுமா!
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.