எழுதியவர்: சித்திரவேல் சுந்தரேஸ்வரன்
சொல்: குடை
பாடசாலையிலிருந்து வந்த உமேஸ் “நாளைக்கு கட்டாயம் குடை கொண்டு வரனும் என்று டீச்சர் சொன்னாங்க.” என்று தனது தாயிடம் கூறும்போதே மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறார் உமேஸின் தந்தை.
“பாருங்க, நாளைக்கு குடை கொண்டு வரனும்னு சொல்லியிருக்காங்க.” என்றாள் தாய். அதற்கு “எனக்கு தெரிஞ்சுபோச்சு.
இந்த காலத்து பிள்ளைகளுக்கு செல்போன்ன தவிற வேற என்ன தெரியும். அதுதான் குடை பிடிக்குறது எப்படினு சொல்லித் தரப்போறங்கபோல.” என்று கூறியவாறே குடையை எடுத்து கொடுத்தார் தந்தை.
மறுநாள் உமேஸ் குடையோடு வருவதை பார்த்து அவனுடைய ஆசிரியை “என்ன இது குடை கொண்டுவந்திருக்க?” என்று கேட்டார்.
அதற்கு உமேஸின் அப்பா “நீங்கதான் கொண்டு வரச்சொன்னதா இவன் சொன்னான்.” என்றார்.
“குடை படம் வரைந்து கொண்டு வரச்சொன்னேன். உங்க பையன் சொன்னா, நீங்க கொஞ்சம் யோசிக்குறது இல்லையா? குடை பிடிப்பது எப்படினு பாடமா நடத்த முடியும்?” என்று ஆசிரியை திட்டி தீர்த்தார். தந்தையின் தலை நிமிரவில்லை. வெட்கத்தால்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.