எழுதியவர்: பிரகதி நவநீதன்
சொல்: துடைப்பம்
சுமதி கல்லூரியில் படிக்கும் இளம் பெண். அவள் பெற்றோருக்கு அவர் ஒரே மகள் சுறுசுறுப்பு திலகம் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் குணம் உடையவள். அவளுக்கு அன்று கல்லூரி விடுமுறை என்பதற்காக வீட்டை சுத்தம் செய்ய மிகவும் ஆர்வமாக இருந்தாள்.
அவளுடைய அம்மா கூட” பணி செய்பவள் வந்தால் செய்து விடுவாள். நீ ஏன் இது செய்கிறாய்” என்று கேட்டதற்கு ” நாம் இருக்கும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு “எங்கே துடைப்பம்” என்று கேட்டாள்
அந்த துடைப்பம் பழையதாயிருந்தது. அதனால், கீற்றுகள் ஒழுங்காக சுத்தம் செய்ய முடியாமல் கிழிந்து போயிருந்தன. தன் சுத்தம் செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள அவள், இதற்கு ஏற்ற புதிய துடைப்பத்தை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
உடனே தன் இரண்டு சக்கர வாகனத்தில் , சந்தைக்கு சென்று புதிதாக ஒரு துடைப்பத்தை வாங்கினாள். வீட்டிற்குத் திரும்பியவுடன் அவளது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்த துடைப்பம் நன்றாகவும் உறுதியாகவும் இருந்தது. அந்தப் புதிய துடைப்பத்தை பயன்படுத்தி அவள் வீட்டைச் சுத்தம் செய்தாள். வீட்டின் ஒவ்வொரு மூலையும் பிரகாசமாக தெரிந்தது.
இது போன்ற சிறிய விஷயங்கள் தான் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான வேறுபாடுகளை உண்டாக்குகின்றன என்பதை உணர்ந்தாள். ஒவ்வொரு பொருளுக்கும் தன் தனித்தன்மை உண்டு. வாழ்க்கையிலும் நம் செய்கைகளில் புதுமையை கொண்டு வர முடிவு செய்தால், அதன் மூலம் நம் வாழ்க்கையும் புதிதாய் பிரகாசிக்கலாம் என்பது அவளுக்கு புரிந்தது.
சுமதி அம்மாவுக்கு தன் மகளின் செய்கை மிகவும் பிடித்திருந்தது. நிச்சயம் இவள் புகுந்த வீட்டில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு நம் குடும்பத்திற்கே ஒளி விளக்காக இருப்பாள் என்று தன் மகளை ஆசையுடன் அனைத்து கொண்டார்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.