எழுதியவர்: நா. பத்மாவதி
சொல்: மஞ்சம்
சிறு வயதில் இருந்தே அக்கறையும் நட்பும் பகிர்ந்த திவ்யாவும், அருணும் வாழ்க்கையின் பல மாற்றங்கள் கடந்து மீண்டும் சந்திக்கின்றனர்.
வேலைக்காக வந்தவர்கள் நீண்ட நாட்களுக்கு பின் எதிர்பாராது சந்திக்க வாழ்வில் நடந்தவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.
“பேசாம நாமளே கல்யாணம் பண்ணி இருக்கணும், நீ என்ன நினைக்கிறே அருண்” என திவ்யா கேட்க,
“இல்ல திவ்யா நாம ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா மட்டும் தான் இருக்கணும்” என்றான் அருண்.
ஏன் என்பது போல திவ்யா பார்க்க ,
“ஆமா திவ்யா, ஏற்கனவே ஆண்-பெண் நட்புன்னாலே எல்லாரும் தப்பா தான் பார்கறாங்க, ஆனா நாங்க அப்படி இல்லனு சொல்லணும். மேலும் தோழிய எப்படி மலர் மஞ்சத்துல கனவு தேவதையா பார்த்து வாழ்க்கைய பகிர்வது? தோழமை வேற, மஞ்சம் வேற ங்கறது என்னோட கருத்து” என்று நிறுத்தினான் அருண்.
அருண் மனதில் நிரந்தர தோழியாக இடம் கிடைத்த பெருமிதத்தோடு
எனக்கு எப்பேர்பட்ட நண்பன் நினைத்தபடி திவ்யா அவனைப் பார்த்தாள்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.