எழுதியவர்: உஷாமுத்துராமன்
சொல்: அன்னாசி
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் விஷாகா பள்ளியில் கிறிஸ்துமஸ் புது வருடத்திற்காக யார் சிறந்த கேக் செய்கிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று சொன்னவுடன் அவள் பாட்டியிடம் சென்று “என்ன செய்யலாம்?” என்று கேட்டாள்.
பாட்டி “முட்டை இல்லாமல் அன்னாசிப்பழ கேக் செய் நிச்சயம் உனக்கு பரிசு கிடைக்கும்” என்று அதன் செய் முறையை சொல்லிக் கொடுத்தார். வீட்டில் ஒன்று இரண்டு முறை பயிற்சி செய்து கொண்ட விஷாகா.
தேவையான பொருட்களுடன் போட்டியில் கலந்து கொள்ள அவளுக்கு தான் முதல் பரிசு கிடைத்தது.
நடுவர்களாக வந்தவர்கள் விஷாகா செய்த அன்னாசி பழகேக் சாப்பிட்டு” முட்டையில்லாமல் இவ்வளவு அற்புதமாக கேக் செய்திருக்கிறாயே” என்று சொன்னவுடன் அவள் “என் பாட்டி எனக்கு முட்டையில்லாமல் செய்ய சொல்லிக் கொடுத்தார்” என்று பெருமையாக சொன்னாள்.
“முட்டை இல்லாமல் எப்படி இவ்வளவு சாப்பிட்டாக வந்தது” என்று கேட்டவுடன் விஷாகா “பாட்டி ஒரு ஆப்பிள் தோலை சீவி நன்றாக வேக வைத்து மிக்ஸியில் அரைத்து நாம் செய்யும் கேக்கு பொருள்களுடன் கலந்து விட்டால் முட்டை போட்டால் எவ்வளவு சாப்ட்னஸ் வருமோ அதே சாப்ட்னஸ் வரும் என்று சொன்னதால் அப்படி செய்தேன்” என்று சொன்னவுடன் அவளுடைய சின்ன வயதில் நல்ல தெளிவான சிந்தனை உடையவள் என்று பாராட்டினர்.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.