எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: குடை
“குடையை இடத்துல வை தாத்தா பாத்தா அடி விழும்” அம்மா சொன்னது காதுல ஒலிக்கறது.
“என்ன காலங்காத்தால குடையை வச்சு ஆராய்ச்சி பண்ணியாறது” இது தர்ம்பத்தினி பிரேமா.
“இல்லைடி இது என் தாத்தாவோட எப்பவும் கூடவே போகும்.வெயிலுக்கு குடை,இல்லைன்னா வாக்கிங் ஸ்டிக்னு எல்லார் கிட்டயும் சொல்லுவார்”
“பேரனுக்கு ஒரு சொத்து சேத்து வைக்க துப்பு இல்லை குடையை விட்டுட்டு போயிருக்கார்”
“சிவகங்கை ராஜா கிட்ட வேலை பாக்கறப்ப ஒரு மழைக்காலத்துல ராஜாவே தன் கையால இதைக் கொடுத்தாராம்”
“பெருமைதான் போங்க பொத்தல் குடைக்கு”
எதிர் வீட்டு திண்ணைல பட்டறை போட்டு வேலை செய்யற ஆசாரி
“அம்மா கொஞ்சம் சூடம் இருந்தா கொடுங்கனு” வந்தார்.
என் கைல குடையைப் பாத்து,”அதைக் கொஞ்சம் இங்கே கொடுங்க”
அதை விரித்தார்,”ஏய்யா இப்படி அலட்சியமா வச்சிருக்கீக உள்ளே கம்பி பூரா தங்கம்,கால் கிலோ தேறும்”
பிரேமா மயக்கமடையாத குறை.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.