100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ரத்தமும் தக்காளி சட்னியும்

by admin 3
143 views

எழுதியவர்:எம். சங்கர்

சொல்: ஊஞ்சல்

சென்ட்ரலில் ட்ரெயினுக்காக காத்திருந்தபோது கோவை தோழி கமலாவை
பார்த்தேன்.
“ஹலோ கமலா என்ன சென்னைல?”
“பையனுக்கு இங்க ட்ரான்ஸ்ஃபர் ஆகிருக்கு போன மாசம்தான் கல்யாணமாச்சு. பாக்கலாம்னு வந்தேன்”
“எப்படியிருக்காங்க?”
“ஏதோ இருக்காங்க”
“என்னவோமாதிரி சொல்றீங்களே?”
“என்னத்த சொல்றது. செல்லமா வளத்தேன். சாப்பிட்ட தட்டைகூட 
எடுக்கமாட்டான். இப்போ இந்த பொண்ணு அவன ஆட்டிப்படைக்கறா. பாதிநாள் வெளில சாப்பாடு. வாரம் ரெண்டு சினிமா. வீட்டில 3 வேலக்காரி.இவனும் புத்தி 
மழுங்கிப்போய் அவள ஊஞ்சல்ல வச்சு ஆட்டறான்”
“விடுங்க. தன்னால சரியாயிடும்.  இப்போ எங்க போறீங்க”
“பொண்ணு வீட்டுக்கு போறேன்.அவளுக்கும் இப்பதான் கல்யாணம் ஆச்சு”
“சந்தோஷம்.அவங்க எப்படி இருக்காங்களாம்?”
“நேத்து ஃபோன்ல பேசினா. மாப்பிள எம்பொண்ண ஒரு வேல செய்யவிடறதில்லையாம் சமைக்ககூட விடாம வெளியிலேர்ந்தே 
வாங்கறானாம். தங்கமான பையன்”
“உனக்குன்னா ரத்தம் எனக்குன்னா தக்காளி சட்னியாடா” பக்கத்திலிருந்தவர் மொபைலிலிருந்து வடிவேலு அசந்தர்ப்பமா அலறினார்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!