எழுதியவர்: ஆதி தனபால்
சொல்: குடை
இருளை மறுக்காத வானம் ஓய்வில்லாமல் ஒளியுடனும்,ஒலியுடனும் மழையைக் கொட்டிக்கொண்டிருந்தது ..
“எப்ப நிக்கும்னு தெரியலயே?” கரன்ட் வேற இல்ல,அதனால “இருக்குற ஒரே ஒரு குடையும் எங்க இருக்குன்னு தெரியல” கையில் இருந்த செல்போனில் டார்ஜ் லைட்டை அடித்துக் கொண்டே குடையைத் தேட ஆரம்பித்தேன்.
ஏற்கனவே ஒளிந்து கொண்டு கண்ணில் அகப்படாமல் இருந்த பொருட்களெல்லாம் “நாங்க இங்க தான் இருக்கோம்ன்னு” தலையை நீட்டிக் கொண்டே வெளியே வந்தது.
ஆனால் “எனக்குத் தேவையான குடை மட்டும் கிடைக்கல”
“குடைய எங்கங்க வச்சீங்க,என் மனைவி என்னைக் கொடையாய் கொடஞ்சுக்கிட்டிருந்தா”
“ஏம்ப்பா அந்தக் கொடைய எடுத்தாதான் என்னப்பா?”அப்பாவின் அப்பாவித்தனமான குரல் …
“ஆளாளுக்குப் பேசாம குடையத் தேடுங்க “ அம்மாவின் அதட்டல் குரல்…
இத்தனை பேச்சுகளுக்கும் பயந்து போய் மழை ஒருவழியாக நின்னே போயிடுச்சு..
இவ்வளவு பிரளயம் நடந்தும் எதுவுமே காதில் கேட்காமல் ஓட்டின் கூரையில் ஒரு ஓரமாய் ஒழுகிக் கொண்டிருக்கும் இடத்தில் குடை கோழிக்குப் போர்த்தப்பட்ட பஞ்சாரமாய் இருந்தது.
கையில் போனுடன் என் அடுத்த தலைமுறை விளையாடிக் கொண்டும் ,தனக்குத் தானே சிரித்துக் கொண்டும் இருந்ததைப் பார்த்த போது பதட்டம் தென்பட்டது.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.