எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: பீரங்கி
சக்தி ஃபயர்ஒர்க்ஸ் மேனேஜர் காசிநாதன் ஃபோர்மேன் வேலுவை தன் அறைக்கு அழைத்தார்.
“தீபாவளிக்கு ஒரு மாசம் கூட இல்லை,இந்த தடவை சேல்ஸ்ல நாம நம்பர் ஒன் ஆகணும்”
“சார்,நாம கேப்பு ,மத்தாப்பு, சீனி வெடி,சக்கரம்னு தானே செய்யறோம். முதலாளி புதுசா எதுவும் செய்ய விடறதில்லை”
“இந்த தடவை பயங்கரமா வெடிக்கற பீரங்கிவெடி பண்ணுவோம்”
“அச்சோ முதலாளி கூடாதுன்னாரே”
“அதை நான் பாத்துக்கறேன்,நல்ல கவர்ச்சி நடிகை படம் பேக்கிங்ல வரணும்,பாரு நாம எங்கே போறோம்னு.”
போலீஸ் சூப்ரண்ட் மகேஸ்வரவர்மாவோட மனைவி தன் பையன் லோகேஷுடன் தீபாவளி பர்சேஸ்,பட்டாஸ் கடைக்குப் போனார்.
வாங்கின பட்டாஸ்கள்ல புதுரக பீரங்கிவெடியும் கவர்ச்சியா சிரிச்சது.
லோகேஷ்,”தாத்தா இதோ பாரு பீரங்கிவெடி”
“கம்பி மத்தாப்பு விடுடா”
“போ தாத்தா”
அப்பதான் ஜீப்ல இருந்து இறங்கின மகேஸ்வரவர்மா அந்த பயங்கர சத்தத்தில் உறைந்து போனார்.
அப்பானு அலறிய வண்ணம் தந்தையைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். இப்ப காசிநாதனும் வேலுவும் போலீஸ் லாக்அப்ல.
இப்ப காசிநாதனும் வேலுவும் போலீஸ் லாக்அப்ல.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.