எழுதியவர்: கௌரி சங்கர்
சொல்: விரல்
ராமு – நீ மார்ச்சுவரி ரூமுக்குள்ள இடது பக்கம் போற; இரண்டாவது வரிசையில் 22ம் நம்பர் பாடியை பாக்குற – இடது கை நடுவிரல் – வெட்டி எடுக்குற; அடுத்த 10 நிமிசத்துல இங்கே வந்து
சேர்ற. விரலை பாட்டில் திரவத்துல போட்டுடு – மறந்துடாதே.
எதுக்குன்னே விரல்? இப்ப சொல்லுங்க; பாடியை தூக்கி கொண்டாந்துடுறேன். டேய், பாடியை வச்சி என்னடா பண்ணப்போறோம். அந்த விரல் ரேகை தாண்டா பேங்க் லாக்கரையே திறக்கப்போவுது. லாக்கர் உள்ளாற கோடிக்கணக்குல தங்கம் இருக்குது. கவனம். இன்னும் இரண்டு மணி நேரத்துல போலீஸ் பாடியை சொந்தக்காரங்க கிட்ட தரப்போவுது. அதுக்குள்ள முடிக்கணும்.
அரை மணி நேரம் கழிந்து; அண்ணே – சீனி பேசுறேன். ராமு வந்துட்டானா ? இப்ப தான் வந்தான்;
அண்ணே – பாடி மாறிடுச்சின்னே; ராமு 12ம் நம்பர் பாடியை குறி வச்சிட்டான்னே யாரு பாடிடா அது ?
நம்ம தெருவுல பிச்சை எடுக்கிற மூர்த்தியுட பாடின்னே.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.