100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சந்தனக் காப்பு

by admin 3
172 views

எழுதியவர்: சுஶ்ரீ

சொல்: சந்தனம்

என் பேர் லட்சுமிநரசிம்மன், பழனில கீழவடம்போக்கித் தெருவுல சங்கரசாஸ்திரிகள் வீடுன்னா எங்க வீட்டுக்கு சரியா வழி காட்டுவாங்க.

அப்பல்லாம் மலைக்கோவில்ல இவ்வளவு கூட்டம் இருக்காது. நினைச்சப்ப போய் தண்டாயுதபாணியை தரிசிப்போம்.

பசங்க நாங்க போட்டி போட்டு படியேறுவோம்.ஒரு ரகசியம் சொல்லவா? மேல போய் தரிசனம் பண்றப்ப ஆண்டவன் சந்தனக்காப்புல இருந்தா நினைச்ச காரியம் கண்டிப்பா நடக்கும். 8வது பரிட்சை சுமாராதான் எழுதினேன்,.ரிசல்ட் அன்னிக்கு காலங்காத்தால படியேறி ஓடினேன்,முருகன் சந்தனக்காப்புல சிரிச்சான் அப்பறம் என்ன பாஸ்தான்.

லலிதாவை முதமுத.பஸ்ல இருந்து இறங்கி நடந்து போற அழகுல மயங்கிட்டேன்.நடராஜன் கிட்ட சொன்னேன்,”கட்டினா இவளை மாதிரி பொண்ணை கட்டணும்டானு” அதுக்கப்பறம் அடிக்கடி அவ வீட்டுப் பக்கம் அவ கண்ல படறமாதிரி நடந்தேன்.

எனக்கு வேலை கிடைச்சவுடனே முருகனை மேலே போய் சந்திச்சேன்,சந்தனக்காப்புதான் அன்னைக்கும்.சந்தோஷமா வரப்ப லலிதா தனியா படில ஏறி வரா,ஒரு புன்முறுவல் மனசுல மத்தாப்பு ரெண்டு ரெண்டு படியா குதிச்சு இறங்கினேன்.

இன்னிக்கு சூரசம்ஹாரம்,மனைவி லலிதாவோட மேலே போறேன்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!