எழுதியவர்: சுஶ்ரீ
சொல்: சீப்பு
“வத்சுக் குட்டி சீப்பை எங்கம்மா வச்சே”
“போப்பா எப்ப பாத்தாலும் என்னையவே சொல்றே”
“நீயோ,தம்பியோ,அம்மாவோ,சீப்புனு இல்லை எதையும் ஒரு இடத்துல வைக்கப் பழகுங்க.அப்பதான் அடுத்த முறை கண்ணை மூடிட்டு போனாலும் கையில கிடைக்கும்”
வத்சலாவுக்கு இப்பவும் அப்பாவோட குரல் கணீர்னு கேக்குது. ஆனா இப்பத்து பிள்ளைங்க எவ்வளவு சொன்னாலும் எங்கே கேக்குது.
எழுதற இடத்துலயே பேனா தனியா மூடி தனியா.நினைச்சப்ப புதுசு புதுசா எல்லாம்.
இது சின்ன விஷயம்தானே ஏன் செய்ய மாட்டேன்றாங்க தெரியலை.இதனால நேர்ந்த விபரீதம் மீட்க முடியா நஷ்டம்.
வத்சலா வீட்டுக்காரருக்கு ஹார்ட் வீக்,டாக்டர் கொடுத்த அவசர மாத்திரை கட்டில் பக்கம் குட்டி மேஜை மேலதான் இருக்கும் வினாடில எடுக்கற மாதிரி.அன்னிக்கு ரூம் கிளீன் பண்றப்ப இடம் மாறிப் போச்சு.அன்னிக்குப் பாத்தா பாழாப்போன வலி வரணும்.துடிக்கற மனுஷனுக்கு மாத்திரை அகப்படலை. டாக்டர் வந்து உதட்டை பிதுக்கிட்டு போயிட்டார்.
தயவு பண்ணி சீப்புனு இல்லை, எல்லாத்தையும் இடத்துல வச்சு பழகுங்க.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.