100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: மகனின் அறிவுரை

by admin 3
142 views

எழுதியவர்: நந்தினி கிருஷ்ணன்

சொல்: முட்டை

கதிர்  தினமும் அதிகாலையில் எழுந்து பண்ணைக்குச் செல்வார்.ஒரு நாள் சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றியது.

கதிர் வழக்கம்போல கோழி கூட்டுக்குச் சென்ற போது ஒரு முட்டை தரையில் விழுந்து உடைந்து கிடந்ததை பார்த்த கதிர், ‘ஒரு முட்டை விட்டுப் போனாலென்ன?  என எண்ணினார்.

ஆனால்,  அவரது மகன் அருண் அவ்வாறு எண்ணவில்லை.
“அப்பா, இந்த முட்டையின் உள்ளே ஒரு கோழிக் குஞ்சு வாழ்ந்திருக்கும். அது உயிர் பெறாததால், அதன் வாழ்வும் நமக்கு கிடைக்கக்கூடிய வருமானமும் நழுவிப்போயுள்ளது!” என்றான்.

அருணின் வார்த்தைகள் கதிரின் மனதில் மோதலை உண்டாக்கின. ஒரு முட்டையை நாம் எளிதாக மதிக்காதபோதிலும், அதற்குள்ளே ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்பதை அவர் உணர்ந்தார். அந்த நாள் முதல், கதிர் தனது பண்ணையில் உள்ள ஒவ்வொரு நுணுக்க விஷயத்திற்கும் அக்கறை காட்டத் தொடங்கினார்.

கதிரின்  முட்டை பண்ணை நன்றாக பராமரிக்கப் பட்டதால்  நல்ல வருமானத்தைக் கொண்டது. அதுவும் அவன் மகன் அருணின் அந்த ஒரு வாக்கியத்தின் மூலம் ஏற்பட்ட மாற்றம்தான்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!