எழுத்தாளர்: ரங்கராஜன்
மகேஸ்வரி பள்ளிக்கூடத்தில் முதலாக வந்தாள், அடுத்ததாக கல்லூரி படிப்பை படிக்க எண்ணி வீட்டுக்கு வர,அந்தகாலத்தில் பேரிடியாக அவளுடைய தந்தை விபத்தில் காலமாக ,ஏற்கனவே மகேஸ்வரியினுடைய தாய் கொரனா காலத்தில் காலமாக , தற்போது தந்தையும் காலமாக குடும்ப ப்பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை.
மகேஸ்வரியின் தம்பி பத்தாம் வகுப்பு முடித்து அதே பள்ளியில் +2 சேர்ந்து விட்டான். தம்பிக்காக மகேஸ்வரி படிப்பை தியாகம் செய்தாள்.
நல்ல வேளையாக அப்பா வீடு கட்டியிருந்தால், சொந்த வீடு, விபத்தில் இன்ஷரன்ஸ் மூலமாக பணம் வர, அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, “இ” சேவை மையம் ஆரம்பிக்க முடிவு செய்தாள் மகேஸ்வரி.
அவள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக விவரம் கேட்டு இ சேவை மையம் ஆரம்பித்தாள் மகேஸ்வரி.
கொஞ்சம் கொஞ்சமாக மையம் வளர ஆரம்பிக்க, அதன் விவரங்களைத் தெரிந்து கொண்ட, ஏழைகளுக்கு உதவி செய்யும் வண்ணம் அவர்களிடம் பணம் கட்டாயம் என்பதில்லாமல் சிலருக்கு இலவசசேவைசெய்தாள்.இதன் மூலமாக அந்த மக்கள் அவர்களுடைய சந்தேகங்களுக்கு மகேஸ்வரியை தேடி வர அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்தாள்.
மகேஸ்வரி தம்பி மகேஸ்வரி போல் +2ல் ,அவன்படித்த பள்ளியின் முதல் மாணவணாக அக்காவின் பெயருக்குப் பெருமை சேர்த்தான்.
தம்பியை அரசுக்கல்லூரியில்சேர்த்தாள் மகேஸ்வரி, அவன்+2ல் வாங்கிய மார்க் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. கல்லூரி முடிந்து, அக்கா சேவை மையத்தில், அக்காவுக்கு உதவி செய்தான்.
மகேஸ்வரியின் செயல் நிறைய பேருக்கு, தாய்மாதிரி இருந்தது என்றால் மிகையல்ல. சாதாரண ஜனங்களுக்கு மகேஸ்வரி தாயுள்ளத்தோடு செய்த உதவி யால் அவளை எல்லோரும் பாராட்டினார்கள்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: