வயது வரம்பு இல்லை
பாலின வரம்பு இல்லை அனைவருக்கும்
பிடித்த உடை என்றாலும்
வடிவத்துடன் இருப்பதால்
அணிய விரும்பும் ஜீன்ஸ்..
தணியாத தாகம் என
இந்த உடையின்
பணி சிறப்போ சிறப்பு..
கனியென இனிக்கும்
வனிதை முதல் வாலிபர்
வரை ஒன்று வைத்திருந்தால் போதுமென எண்ணுவதுடன்
காது காது தோய்க்க காது
என உற்சாகமாக
மெட்டு போடாமல்
தட்டி தட்டி பாடுவர்
வசதியான ஜீன்ஸ்
அசதியை போக்கி
சுறுசுறுப்பு தருவது உறுதி!
உஷா முத்துராமன்