கண்ணம்மா கன்னமா கன்னத்தில் காயமா?
காயமா? கன்னத்தில் உண்டாகும் மாயமா?
எண்ணத்தால் கன்னத்தில் வண்ணம் மாறுதம்மா
கோபத்தில் சிவக்குதம்மா நாணத்தால் வெளுக்குதம்மா
மஞ்சத்திலே மனக்குதம்மா மஞ்சளாய் மாறுதம்மா
கள்ளுண்ட மதியாய் மனம் தவிக்குதம்மா
கன்னத்தில் தெண்ணங்கள் குடிக்க துடிக்குதம்மா
கன்னத்தில் கன்னம்வைத்து களவாட நினைக்குதம்மா
கன்னம் கண்ணி போகாமல் தடுக்குதம்மா
கன்னக்குழியில் என் உலகம் சுழலுதம்மா
சர். கணேஷ்
வாரம் நாலு கவி: கண்ணம்மா
previous post