விண்ணை நோக்கி வளரும் தென்னை
விண்ணவர்க்கு படைப்பது தேங்காய்
முக்கண்ணனை நோக்கி முக்காலமும் அறிந்திட
முக்கண் கனியை உடைத்து படைத்திட
முக்தியை நித்தமும் வேண்டிட
ஆரோக்கிய வாழ்விற்கு உண்டிட
ஆனந்த வாழ்வு அமைந்திட
அடி முடி காண ஓடிட
தென்னையின்
அடியிலிருந்து நுனிவரை அனைத்தும் பயனே
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: விண்ணை
previous post