ஆள் பாதி ஆடை மீதி
ஆதாம் ஏவாள் செய்த தவறால்
உடை ஏறியது மனிதனின் உடலில்
பாரம் ஏறியது மனிதனின் மனதில்
இலை தளை ஆடையில் தொடங்கி
விலங்கு தோல் ஆடையில் பயணித்து
பட்டு பருத்தி என்று வந்து
செயற்கை நூலாடை வரை வந்தது
காலங்கள் மாறினாலும் ஆடை மீது
மனிதனுக்கு மோகங்கள் குறையவில்லை
நேர்த்தியாக உடை உடுத்த தவறவில்லை
— அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: ஆள்
previous post