வாரம் நாலு கவி: விந்தனு

by admin 3
51 views

விந்தணு வங்கிகளின் அளப்பரிய சேவை
ஆங்காங்கே செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்
கரு தாங்க முடியலயா கவலையில்லை
வாடகைத் தாய்கள் சூல் தாங்க
ஆக இன்றைய நவீன உலகில்
மாற்று வழி உண்டு அனைத்துப் பிரச்சனைகளுக்குமே
வங்கியில் பெற்ற விந்தை வாடகைத்தாய்
கருமுட்டையாய்ச் சுமந்து பெற்றுக் கொடுக்க
எங்கே போய்த் தேடுவது குரோமோசோம்களின் பிரிவையும் மரபணுக்கள் சேர்க்கையையும்…
ஒருவேளை நாம் மரபுகள் மீறிய பயணிகளோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!