எழுதிச் சென்ற விதிக்கு
விதிவிலக்காய்
எழுதப்படாமல் விடப்பட்ட பக்கங்களின் சான்றாய்
கண்ணிலகப்படா கானலாய்
காட்சியின் சாட்சியாய்
வாழ்க்கை பிம்பத்தில்
இலைமறைக்காயாய் ஒளிந்த
மரபின் குரலுக்கு
விடயங்களின் தடமாய்
மறைக்காமல் மறையாய்
ஓதும் ஒலிப்பெருக்கி
சுருள் மொழியால்
இரு உருவாய்
உருண்டோடும் கருவின்
கவசகுண்டலமாய்க் காக்கும்
கர்ணகுணம் நினது!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: எழுதிச்
previous post