பலகோடி தலைமுறையின் சுவடுகளை சுமந்து;
பெற்றோரின் மூத்தோர்கள் மரபுகளை அணைத்து;
நிறம் முகம் பழக்கம் முதற்கொண்டு
கண்கள் வார்த்தை நோய்களும் தருமாம்!
அப்பன் புத்தி தாத்தன் சக்தி
அன்னையின் அழகு ஆத்தாளின் யுக்தி
எல்லாம் தருவது தாயனை என்றால்
முதல்உயிர் தந்ததே அனைவரும் அன்றோ!
எல்லாம் ஒன்றே என்று கொண்டால்
கோபமும் வெறுப்பும் தோன்றுமோ உலகில்!!
பூமலர்