தலைமுறை தலைமுறையாய் தனிதன்மையை கடத்துது
தாயனை மூலக்கூறு தன் தாயினை காட்டுது
அறிவியல் வளர்ச்சியின் அசாத்திய உச்சம்
அறிவின் வளர்ச்சியில் அதிசயம்தான் மிச்சம்
தாயனை பிரிவின் மரபணு மாற்றி
விரைவாய் விளைந்திடும் பயிரினை உருவாக்கி
உணவாய் உண்டு விரைவில் மடிகிறோம்
முன்னோர் உயரம் ஏழடி என்றனர்
வாழும் ஆண்டுகள் சதம் குறையாது என்றனர்
தாயனை தொடர்பில் பரிமான வளர்ச்சியோ
மனிதனின் பேராசையின் ஆலகால வளர்ச்சியோ
மரபணு மாற்றிய உணவினை தவிர்ப்போம்
பாரம்பரிய முறையை முறையாய் கடைபிடிப்போம்
மலடாய் வாழாமல் மகிழ்வாய் வாழ்வோம்
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: தலைமுறை
previous post