ஆள்வது யாரானால் எனக்கு என்ன?
அன்றாட பொழப்பு
ஓடுனா சரிதான்னு
எது நடந்தாலும்
நடக்கட்டும் என்றே
ஒதுங்கியே போவது
ஒருவித தலைக்கனமே..
கடமைகளை மறந்து
கட்டுப்பாடு தவிர்த்து
சட்டதிட்டங்களை
சருகென மிதித்து
வீரமிதுதான் என்றே
வீராப்பு காட்டி …
இலட்சியமில்லா வாழ்வும்
ஏனோ அலட்சியமாக…
“சோழா” புகழேந்தி
வாரம் நாலு கவி: ஆள்வது
previous post