நீ கொண்டதை
கொடுக்க வேண்டாம்
தேவை போக
மிஞ்சியதை கொடுக்கலாமே !
சுயநலம் கொண்டு
பதுக்குதல் அறமா?
கிடைத்தது எல்லாம்
இங்கிருந்து கிடைத்தவையே !
சிறிது கொடுத்து
மகிழ்ந்து – மகிழ்விப்போமே !
ஏமாற்றங்கள் இல்லா
மனிதர்கள் இங்கேது ?
ஏமாற்றம் தரும் சுயபச்சாதபம் ஏற்படுத்துமே சுயநலம்.
மனதை விசாலமாக்க
மறைந்திடுமே சுயநலமே!
பி. தமிழ் முகில்
வாரம் நாலு கவி: நீ
previous post
