வாகன புகை
சுவாசத்தை கெடுக்கும்
புகையிலை புகை
காசத்தை கொடுக்கும்
சாம்பிராணி புகை
வாசத்தை கொடுக்கும்
ஊதுபத்தி புகை
பக்தியை பெருக்கும்
அடுப்பின் புகை
வயிற்று பசியை போக்கும்
கடுப்பின் புகை
வயிற்று எரிச்சலை கொடுக்கும்
ஹோமப் புகை
மன அமைதி கொடுக்கும்
காதல் புகை
சந்ததி பெருக்கும்
காமப் புகை
வீழ்ச்சியை கொடுக்கும்
ஐந்து விரல்களின் நடுவே
ஆறாம் விரலாய் தோன்றிடும்
அரக்கனை விட்டுடுவோம்
புகையெல்லாம் பகையல்ல
புகையில் நன்மையும் உண்டு
நல்லதை எடுப்போம்
தீயதை ஒழிப்போம்
நலமாய் வாழ்வோம்
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: வாகன
previous post