சூழ்நிலை கருத்தில் கொண்டு
இலக்கை கணித்திடு நன்று!
அடுத்த நிலைகளை திட்டமிடு
முயற்சிகள் மேம்பட எண்ணமிடு!
சிறுசிறு வெற்றிகள் கடந்துவிடு
தோல்விகள் படியெனத் தாண்டிவிடு!
பெற்றவர் மற்றவர் கூறுவதை
சீராய்வு செய்து படித்துவிடு!
மெதுவாய் மேல்படிகள் திட்டமிட்டு
செயலில் வேகம் கூட்டிவிடு!!
பூமலர்