வாரம் நாலு கவி: களங்கமது

by admin 3
33 views

களங்கமது கலவியிலாகையில் கற்பழிப்பாகுமே
களமது கலவிக்கெதுவென காணாது
காணுமிடமெலாம் காண்போரெலாரிலும் காமுறல்
கன்னியாயினும் காளையாயினும் கற்பழிப்பேயாகிடுமே
கன்னிமைத்தன்மை கன்னியர்க்கென்றே கற்பித்தவர்க்குரைக்கிறேன்
கண்மூடித்தனமாய் காமுறுகையில் களங்கமடைந்ததாரோ?
காமுறும் கயமைத்தனம் களமாக்கிய
கயவனையே கற்பழிந்தவனென கற்பித்திடு(வோமே)வேனே!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!