வாரம் நாலு கவி: சைகிளில்

by admin 3
38 views

சைகிளில் பள்ளிக்கு சென்றவரும்
நாளில்
அம்மா அப்பா நான் தங்கை
என குடும்பமாய் மாட்டு வண்டி
பயணம் குதூகலகுஷி நிறைந்த
கொண்டாட்டம்
பிறந்தநாளில் அம்மா பூசிடும் திருநீறும்
பெரியவர்கள் ஆசிர்வதிக்க சேர்த்த காசு
அதில் சாக்லெட் போக மீதி பிடித்தம்
தரும் ஒரு தனி கொண்டாட்டம்
தீபாவளி இனிப்பும் உறவின் களிப்பும்
ஆஹா அதுவல்லவோ உண்மையான
கொண்டாட்டம்.
                                      

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!