ஈராறு திங்களை மதிதனில் மீட்டி
எண்ணத்தில் விழைந்தது வினையால் விளைந்ததா!
பயணித்த பாதையில்
பயனும் இருந்ததா!
சிறந்ததெது குறைந்ததெது
சுற்றம் சொல்லியதா!
துளிக்கருவே முழுவுயிராகும்
முன்னூறு நாளில்!
மேலும் ஒன்றாய்
முதிர்ந்த வயதில்
முன்னேற்றம் முழுக்கைப்பிடியளவேனும்
முகவரி சொல்லியதாவென!
தொகுத்துப் பிரித்து
தொகுத்தறி மதிப்பீடிட்டு
சிறுத்ததை பெருக்கி
பெருத்ததைச் சிறப்பித்திட
வாய்ப்பைச் சுமந்துவரும்
உன்னதப் புதுப்பாதையே!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: ஈராறு
previous post