முயலும் ஆமையும் முன்னெடுத்ததுவே
முதலில் யார் வருவதென்றே
முயற்சித்துப் பார்த்திடும் முயற்சியினை
முதலில் வந்தது முயலா?!
முயலின் முயலாமையன்றோ வந்தது
முயன்று முன்வந்த ஆமை
முயலாதிருந்திருந்தால் முன் வந்திருக்ககூடுமோ!?
முயலோடு முன்வர முடியாதென்றே
முயலுமுன் அறிந்திருந்த ஆமை
முயலாமையால் முன்வரவியலாதெனவும் அறிந்திருந்ததோ..!!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் ஒரு முறை: முயலும்
previous post