உள்ளிருப்புப் போராட்டத்தில்
பெற்ற வெற்றி
தோலின் இமைத்
திறப்பில் கூட்டாய்
சிவந்த முகத்துடன்
வளைந்த நுதலாய்
அணிவகுத்து நின்று
ஒன்றன்பின் ஒன்றாய்
தலை கவிழ்ந்து
வீழ நேர்ந்தாலும்
நினது சுவையால்
மீண்டும் எழுந்து
சத்துகளை மொத்தமாக
அள்ளிக் கொடுத்து
ஆயுள் நீட்டிப்பில்
வண்ணமயமாய் இடம்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: உள்ளிருப்பு
previous post