வாரம் நாலு கவி: இம்மியளவு

by admin 3
18 views

இம்மியளவு துவாரமெனும்
பயிற்சிப்பட்டறையில்
நூலிழைகளை நுணுக்கமாய்
கட்டிப்போட்டு
மானத்தின் உட்பொருளின்
உறவாய்
கூரிய முனையால்
தைக்க
இருபுறமும் ஓயாது
உழைக்கும்
ஒற்றைக் காலோவியம்
நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!